Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு… பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்!!

புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்ற ரங்கசாமி அங்கு பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். 

pudhucherry cm rangasamy met pm modi at delhi
Author
Delhi, First Published Aug 9, 2022, 9:13 PM IST

புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்ற ரங்கசாமி அங்கு பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். முன்னதாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. கடந்த ஆண்டு மே மாதம் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். ஆனால், அவர் டெல்லி சென்று பிரதமர் மோடியை 15 மாதங்களாக சந்திக்கவில்லை. இது கூட்டணியில் அதிருப்தி ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் புதுச்சேடி முதலலமைச்சர் ரங்கசாமி ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகு டெல்லிக்கு செல்வதாக தகவல் வெளியானது. மேலும் அங்கு, பிரதமரை நேரில் சந்தித்து, பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: நாளை மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்... துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்பு!!

pudhucherry cm rangasamy met pm modi at delhi

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி, டெல்லி சென்று பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று மதியம் 12:45 மணிக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்தது. இதை அடுத்து முதல்வர் ரங்கசாமி நேற்று இரவு 9:00 மணிக்கு வீட்டில் இருந்து தனது தனிச் செயலருடன், காரில் சென்னைக்கு சென்று அங்கிருந்து இரவு 10:55 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து இன்று பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன ஆகியோரை சந்தித்து மனுக்களை வழங்கியுள்ளார். இதனிடையே, பிரதமர், மத்திய நிதியமைச்சர் சந்திப்புகள் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடப்பாண்டு ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்காவிட்டால் மத்திய அரசு கூடுதல் உதவியாக ரூ.2000 கோடி அவசியமாக தேவை.

இதையும் படிங்க: நிதிஷ் குமாருக்கு ஜித்தன் மாஞ்சி ஆதரவு: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று சேரும்-அகிலேஷ்

pudhucherry cm rangasamy met pm modi at delhi

மத்திய அரசு உதவி கடந்தாண்டி ரூ.1874 கோடியாக இருந்தது. இது நடப்பாண்டு ரூ.1724 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தோராயமாக கடந்த ஆண்டை விட 150 கோடி ரூபாய் குறைவு. மத்திய அரசின் கூடுதல் உதவியாக ரூ.2000 கோடி வழங்காவிட்டால், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. அதேபோல் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ. 425 கோடி வழங்க வேண்டும், புதிய சட்டப்பேரவை கட்ட ரூ. 300 கோடி தரவேண்டும், சுகாதார கட்டுமானத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி தேவை. கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ.500 கோடி தேவை. நகர்புற மற்றும் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ. 150 கோடி நிதி தேவை. நீண்ட கால நிலுவையிலுள்ள மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்டவை பற்றியும் முதல்வர் ரங்கசாமி கோரிக்கையாக பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் முன்வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios