கடந்த 10 நாட்களுக்கு முன் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலும், துறைமுகத்துக்கு வந்த கப்பலும் மோதி கொண்டன. இதில், துறைமுகத்துக்கு வந்த கப்பல் சேதமாகி, அதில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது இதனால், சென்னை எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை எண்ணெய் மிதந்த்து.
இதனை துறைமுக ஊழியர்கள், கடலோர காவல்படையினர், மாநகராட்சி ஊழியர்கள் கடலில் கலந்த சுமார் 200 டன் கச்சா எண்ணெய்யை அகற்றினர். ஆனாலும், சில இடங்களில் எண்ணெய் படலம் மிதந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியில், கடலோர பகுதிகளான வீராம்பட்டினம், நரம்பை, பனித் திட்டு, புதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் சென்னையில் கலந்த எண்ணெய் படலம் திட்டுத் திட்டாக கரை ஒதுங்கிக் கிடந்தன.
துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படாமல், மீன்பிடித் தொழில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், கடலோரத்தில் ஒதுங்கியுள்ள எண்ணெய் திட்டுகளால் சென்னையை போலவே, பொதுமக்கள் மீன்களை வாங்க சாப்பிட தயங்குகின்றனர். இதனால், மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கும் என மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
