*பஞ்சாப் நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் பேங்க் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

முக்கிய அறிவிப்புகள்;-

* பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைகிறது. இது நாட்டின் 2-வது பொதுத்துறை வங்கியாக ரூ.17.95 லட்சம் கோடி மதிப்புடன் இருக்கும்.

* கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி ஒன்றாக இணைகிறது. நாட்டின் 4-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ரூ.15.20 லட்சம் கோடி மதிப்புடன் இது இருக்கும்.

* இந்தியன் வங்கியுடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. நாட்டின் 7-வது பொதுத்துறை வங்கியாக ரூ.8.08 லட்சம் மதிப்புடன் இந்த வங்கி இருக்கும்

* யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் வங்கி ஒன்றாக இணைக்கப்படுகிறது. நாட்டின் 5-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது இருக்கும்.

* வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும்.

* வங்கிகள் இணைப்பால் கடன் வழங்கும் திறன் 2 மடங்கு அதிகரிக்கும் 

* வாராக் கடன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது, ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. 

* நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

* சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21% அதிகரித்துள்ளது. 

* 1.25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது, 18 பொதுத்துறை வங்கிகளில் 14 லாபத்தில் இயங்குகிறது.

* ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.

* உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். 

*  வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.