Asianet News TamilAsianet News Tamil

PSLV-C 53: சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்கள் கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது

சிங்கப்பூரின் டீஎஸ்-இஒ உள்ளிட்ட 3 மூன்று செயற்கைக் கோள்களை ஏந்தி PSLV C-523 ராக்கெட் நாளை விண்ணை நோக்கி பாய்வதற்கு தயாராகி வருகிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியுள்ளது.

 PSLV-C 53 Singapore Satellites countdown has begun in Sriharikota
Author
First Published Jun 29, 2022, 5:55 PM IST

சிங்கப்பூரின் டீஎஸ்-இஒ உள்ளிட்ட 3 மூன்று செயற்கைக் கோள்களை ஏந்தி PSLV C-523 ராக்கெட் நாளை விண்ணை நோக்கி பாய்வதற்கு தயாராகி வருகிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியுள்ளது.

சதீஷ் தவான் ஏவுதள மையத்தில் இருந்து இந்த செயற்கை கோள்கள் ஜூன் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான பணிகளில் இன்று இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. 

பொதுவாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை இஸ்ரோ செய்து வருகிறது. இந்த வகையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர், ஸ்கூப் -1 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாது ஏவுதளத்தில் இருந்து நாளை ஏவப்படுகிறது. 

இந்த மூன்று செயற்கைக் கோள்களில் டிஎஸ்-இஒ, நியூசர் ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களும் 155 கிலோ எடை கொண்டவை. ஸ்கூப் -1 செயற்கைக் கோள் 2.8 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக் கோள்கள் நிலத்தின் வண்ண புகைப்படங்கள், பருவநிலை தொடர்பான புகைப்படங்களை தெளிவாக எடுத்து அனுப்பும்.

இந்த மூன்று செயற்கை கோள்களில் ஸ்கூப் 1 மிகவும் சிறியது. சிங்கப்பூரின் என்டியு எலக்டிரிகல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மாணவர்கள் இந்த சிறிய செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். 

நாளை மாலை விண்ணில் ஏவப்படும் இந்த செயற்கைக் கோள்களை பார்ப்பதற்கு விருப்பம் இருப்பவர்கள் தங்களது பெயரை www.isro.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios