Asianet News TamilAsianet News Tamil

மரண மாஸ் காட்டும் முதல்வர்... ஆட்சி அமைத்ததும் பூரண மதுவிலக்கு அமல்!

மிசோரமில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஜொரோம்தங்கா, மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, அந்த மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அறிவித்துள்ளார்.

Prohibition On Liquor ban...Mizoram
Author
Mizoram, First Published Dec 12, 2018, 12:54 PM IST

மிசோரமில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஜொரோம்தங்கா, மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, அந்த மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றள்ளது. அதே நேரத்தில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது.

மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும், மிசோரம் தேசிய முன்னணி கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜொரோம்தங்கா, மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த, 1997ம் ஆண்டு மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது, அந்த மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு, அந்த தடை நீக்கப்பட்டது. இதைதொடர்ந்து அனைத்து பகுகளிலும், மதுபான கடைகள் திறக்கப்பட்டன. Prohibition On Liquor ban...Mizoram

தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் மதுவிலக்கை மையமாக வைத்து, அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். அப்போது, மிசோரம் தேசிய முன்னணி கட்சியினர், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தனர். இதையொட்டி மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலில், 40 தொகுதிகளில் போட்டியிட்ட மிசோரம் தேசிய முன்னணி கட்சி, 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது. Prohibition On Liquor ban...Mizoram

இந்நிலையில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜொரோம்தங்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் சாலை வசதி மேம்படுத்தப்படும். பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், சமூக பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்படும். குறிப்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios