Asianet News TamilAsianet News Tamil

raksha bandhan 2022 : ராகுல் காந்தி புகைப்படத்தை பதிவிட்டு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி

தனது சகோதரர் ராகுல் காந்தியின் புகைப்படத்தைப் பதிவிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Priyanka Gandhi wished Raksha Bandhan with a photo of Rahul Gandhi.
Author
New Delhi, First Published Aug 11, 2022, 3:03 PM IST

தனது சகோதரர் ராகுல் காந்தியின் புகைப்படத்தைப் பதிவிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில் வடமாநிலங்களில் ரக்‌ஷா பந்தன் இன்று  பண்டிகை கொண்டாடப்படுகிறது. சகோதரிகள், சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி, ஆசி பெறுவார்கள். தங்களின் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வார்கள். 

இந்த ரக்‌ஷா பந்தன் பண்டிகை உடன் பிறந்த சகோதர,சகோதரிகளுக்கு மட்டுமானது அல்ல, சகோதரத்துவத்தை புனிதமாகக் கருதும் அனைவரும் இதைக் கொண்டாடலாம். சகோதரராக நினைக்கும் ஒருவருக்கு ஒரு பெண் ராக்கி கயிறு அணிவிக்கலாம்.

 

வடமாநிலங்களில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி, ராகுல் காந்தியும் கொண்டாடினர். பிரியங்கா காந்தி தனது ட்விட்டர்  பக்கத்தில் தனது சகோதரர் ராகுல் காந்தியின் சிறிய வயது புகைப்படம் முதல் தற்போதுள்ள புகைப்படம் வரை பிதிவிட்டு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களைத் தெரிவிததுள்ளார். 

பிரியங்கா காந்தி பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள். சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான அன்பு, நம்பிக்கை, பரஸ்பர நம்பிக்கையின் புனிதத்தை வெளிப்படுத்தும் பண்டிகை” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை தனது இல்லத்தில் கொண்டாடினார். பிரதமர் அலுவலக்கில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று ரக்‌ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினார். சிறிய குழந்தைகள், மாணவ, மாணவிகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி, ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி, பிரசுகளை வழங்கி, ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios