சிம்லா ஹனுமன் கோயிலில் பிரியங்கக காந்தி! கர்நாடக மக்களுக்காகப் பிரார்த்தனை
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பிரியங்கா காந்தி சிம்லாவின் அனுமார் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
கர்நாடகாவில் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை சிம்லாவில் உள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார். சிம்லாவின் ஜக்குவில் உள்ள ஹனுமான் கோவிலில் பிரார்த்தனை செய்த பிரியங்கா காந்தி, கர்நாடகாவிலும் நாடு முழுவதிலும் அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட பிரார்த்தனை செய்தார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் முன்னிலை பெற்றது. ஒரு மணி நேரத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளில் முன்னிலையை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் 130 தொகுதிகள் வரை பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கர்நாடக சட்டசபை தேத்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூருவுக்கு இன்று வருமாறு தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
நந்தினி பால் விவகாரம், முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சனை, ஹிஜாப் விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பின்னடைவை அளித்திருப்பதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப்பெருமான்மை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருப்பதால், ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராக மாறும் சாத்தியமும் காணாமல் போயிருக்கிறது.