Asianet News TamilAsianet News Tamil

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் பிரியங்கா சோப்ரா ‘போர்ப்ஸ் பத்திரிகை’ பட்டியல் வெளியீடு...

Priyanka Chopra On Forbes 100 Most Powerful Women List
Priyanka Chopra On Forbes 100 Most Powerful Women List
Author
First Published Nov 2, 2017, 5:21 PM IST


உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில்,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சந்தா கோச்சா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 5 இந்திய பெண்கள்  இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேசவில் வெளியும் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் குறித்த பட்டியலை நேற்று வெளியிட்டது. 
சொத்துமதிப்பு, சமூகத்தில் மதிப்பு, சார்ந்திருக்கும் தொழிலில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம், சாதனை, சேவை, அரசியல், நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் போர்ஸ் பத்திரிகை சக்திவாய்ந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சந்தா கோச்சா 32-வது இடத்திலும், எச்.சி.எல். கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷினி நாடார் மல்கோத்ரா 57-வது இடத்திலும், அதைத் தொடர்ந்து  பயோகான் நிறுவனத்தலைவர் மஜூம்தார்ஷா 71-வது இடத்திலும் உள்ளனர்.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் தலைவர் ஷோபனா பாட்டியா 92-வது இடத்திலும், ஹாலிவுட், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

Priyanka Chopra On Forbes 100 Most Powerful Women List

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி 11-வது இடத்திலும், அமெரிக்க இந்திய பெண் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளனர்.

உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகியுள்ளார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டு பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios