பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம்: 'இது நம் அனைவருக்கும் பெருமை மிகு தருணம்!
பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அமெரிக்கா செல்லவிருப்பதையொட்டி, இரு நாடுகளுக்குமிடையேயான கல்வி ஒத்துழைப்பின் விரிவாக்கம் மற்றும் உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய முன்முயற்சிகளை ஆராய்வதில் முக்கிய பங்கெடுப்புகள் இருக்கும் என கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பது, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பன்மடங்கு வளரக்கூடும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவும் அமெரிக்காவும் கல்வி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் அறிவு கூட்டாண்மை ஆகியவற்றில் புதிய முயற்சிகள் மற்றும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதைப் பற்றி முன்னணி கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் பகிர்ந்து கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் அரசுமுறை பயணம் அனைவருக்கும் பெருமை அளிப்பதாகவும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நேசத்துக்குரிய மற்றும் எப்போதும் நெருக்கமான நட்புறவை நினைவூட்டுவதாகவும், நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.
"இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை என்பது எதிர்காலத்தை வரையறுக்கும் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது இப்போது நமது முயற்சிகளின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமது இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான நட்பு ஆதரவின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும், பிரதமர் மோடி மற்றும் அதிபர் பிடன் ஆகியோரது நட்புக்கு நல்வாழ்த்துகளும் கூறினார்.
"பிரதமர் நரேந்திர மோடியின் வரவிருக்கும் பயணம் iCET-க்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் மற்றும் அறிவியல் சமூகங்களுக்கு இடையே நீண்ட கால மற்றும் வலுவான உறவை ஏற்படுத்த உதவும்" என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டிங் பள்ளியை வழிநடத்தும் பேராசிரியர் குர்தீப் சிங் கூறியுள்ளார்.
பேராசிரியர் குர்தீப், கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூட்டாட்சி நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட பல கூட்டுத் திட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதையும் நினைவு கூர்ந்தார்.
இதற்கிடையில், டெலாவேர் கவர்னர் ஜான் கார்னி கூறுகையில், 'இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்த வரலாற்று சிறப்புமிக்க அரசு பயணம் மற்றொரு வழியாக அமையும்' என்றார்.