Prime Minister Modis 14th death question

குஜராத் தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடிக்கு நாள்தோறும் ஒரு கேள்வியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேட்டு வருகிறார். அதன்படி, 14-வது கேள்வியை இன்றுடுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட கேள்வியில், “ குஜராத் மாநிலத்தில் உனா நகரில் தலித்துகள் தாக்கப்பட்ட போதும், கொடுமைகள் செய்யப்பட்டபோதும் மோடி அது குறித்து கண்டுகொள்ளாமல் இருந்தார். 22 ஆண்டுகளாக பாஜனதா ஆட்சியில், தலித் மக்களுக்கு நிலமும் இல்லை,கல்வியும் இல்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. பாதுகாப்பும் கிடையாது. 

உனாவில் தலித்கள் தாக்கப்பட்டபோது, மோடி மவுனமாகவே இருந்தார்? அந்த துன்பத்துக்கு யார் பதில் கூற கடமைப்பட்டவர்கள்?. தலித்துகளை பாதுகாக்க எத்தனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதை யார் நடைமுறைக்கு கொண்டு வருவது?’’ எனத் தெரிவித்தார்.