Prime Minister Modi opened the tallest dam in Sardar Sarovar in the country and surrendered to the country.

நாட்டிலேயே மிக உயரமான அணையான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். 

பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே மிக உயரமான அணையான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார்.

 நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த அணை குஜராத் மாநிலத்தின் நவகம் என்ற இடத்தின் அருகில் உள்ளது. 

இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ ஆகும். நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணைதான் மிகப்பெரியது. 

1979 ல் வடிவம் பெற்று 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. குஜராத் மற்றும் சவுராஷ்ட்ரா மக்களுக்கு தேவையான பாசன வசதிக்கான நீர் இங்கிருந்தே எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த அணையால் வனப்பகுதியில் கிராமங்கள் நீரில் மூழ்கி வருகின்றன என்பது போன்ற பல சர்ச்சைகள் இருந்தாலும் மக்களின் நீர் தேவைக்காக மத்திய அரசு இந்த திட்டத்தில் இறங்கி வருகிறது.