கேரளாவும் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அர்ச்சகர் ஒருவரின் பகீர் பேச்சுகள் அடங்கிய  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த 20 நாட்களாக வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம்.  இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருவதால் கேரளாவில் நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது போன்ற பேரிடர்கள் பல இடங்களில் நடந்து உள்ளது. 

மேலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது, மின்கம்பிகள் அறுந்தது போன்ற சம்பவங்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தொட்டுள்ளது.

1924 ஆம் ஆண்டுக்கு பிறகு, கேரளா எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ள பேரிடர் இது.   கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளத்தைக் கேரளா சந்தித்துள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 324 பேர் பலியாகியுள்ளனர். 223139 மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. 

வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மற்றும் நிலச்சரிவில் கேரளாவில் பழம்பெரும் அரண்மனைகள், பலகோடி ரூபாயில் கட்டப்பட்ட பங்களா வீடுகள், பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த பழைய காலத்து அரண்மனைகள் என மொத்தமாக நாசமாகி இருக்கின்றன. இப்படி கேரளாவே தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரச்சகர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அதில், சாமியே சரணம் ஐயப்பா என தனது பேச்சை தொடங்கிய அர்ச்சகர்,  அய்யப்பசமியோட அருள் எல்லோருக்கும் வேண்டும், ஏழைமக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு ஆபத்தில் சிக்கித் தவிக்கின்றார்கள். இதற்க்கு என்ன காரணம் வேனால் இறுக்கம் ஆனால் கோர்ட்டுக்கு போனார்கள் இல்லையா? ஐயப்பன் மலைக்கு யார் வேணாலும் போகலாம், எப்படி வேணாலும் போகலாம் அதான். ஓவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விதி இருக்கு, அச்சாரம் இருக்கும் அதை மாத்த இந்த கோர்ட்டுக்கு யார் அதிகாரம் கொடுத்தா? சரி கோர்ட்டுக்கு போனாலே அந்த பெண்களுக்கு என்ன கடவுள் மேல நம்பிக்கை இருக்கா? அத்தனைபேரும் நாஸ்திக காவிதிகள் அத்தனை பெரும் என பகீர் கிளப்பினார்.

கேரளாவில் இருக்கும் பெண்கள் எல்லோரும் அந்த கோவிலுக்கு போகணும்னு கேட்டாங்களா? என த்தந்து பேச்சைத் தொடர்ந்த அர்ச்சகர் நாங்கள் ஐயப்பன் சாமி தரிசனம் பண்ணியாகனும்னு கேரளா பெண்கள் கேட்டார்களா? கடவுள் நம்பிக்கையுள்ள பெண்கள் கேட்டார்களா? இல்லையே... கேர்ட்டுக்கு போனது கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் கோர்ட்டுக்குப் போனது தானே காரணம். ஏன் இந்த நீதிபதி இப்படி சென்சார்கள்? அதனுடைய சீற்றம் தான் இது. அய்யப்பசாமி என்ன அவ்வளவு குரூரமா என்று அவருக்கு தயவு இல்லையா? கருணை காட்டமாட்டரா என்று, அவர் ஏன் இப்படி மக்கள கஷ்டப்படுத்துராருன்னு. காரணம் என்னன்னா விளைவுகள் எவ்வளவுன்னு கோடிட்டு காட்டியிருக்கிறார். அவர் கொட்டு காட்டியதை நம்மால் தங்கிக்க முடியல இப்போ... இப்போ எல்லோருக்கு திருப்தியா? ஜட்ஜிக்கு திருப்தியா? கோர்ட்டுக்கு போன பெண்களுக்கு திருப்தியா? என கேள்விகளாக அடுக்கினார் அந்த அர்ச்சகர்.

நாஸ்திகம் பேசின அய்யோக்கிய கும்பல்களுக்கு சப்போர்ட் பண்ணீங்களே அவங்களுக்கு திருப்தியா? அதர்மம் வழியில் போனால் இயற்க்கை நமக்கு கொடுயட்டு காட்டும் . தமிழகத்தில் சுனாமி ஏன் வந்தது? ஆந்தராவில் பெருவெள்ளம் ஏன் வந்தது ? அதெல்லாம் நான் சொல்லனுமா? ஏன் உங்களுக்கு தெரியாதா என பகீர் கிளப்பினார். அதற்காக இது தான் காரணம்னு நான் சொல்லல இதுவும் காரணம் என கமல் பாணியில் குழப்பி விட்டுள்ளார் அந்த அர்ச்சகர். கடைசியாக கேரளாவில் பேரு வெள்ளம் அழித்ததற்கு காரணமே ஐயப்பன் சாமிமேல இவர்கள் கைவைத்தது தான் என கூறினார்.