price hike of cylinder

மானியத்துடம் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை 26 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளன.

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மானிய சமையல் கியாஸ் விலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.. 

இதையடுத்து, சென்னையில் மானியம் நீங்கலாக இதுவரை 428 ரூபாய் 40 காசுகளாக இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை 430 ரூபாய் 27 காசுகளாக உயர்ந்துள்ளது. சென்னையில் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1 ரூபாய் 87 காசுகள் அதிகரித்துள்ளது. 

இதேபோல், மானியத்துடன் வழங்கப்படும் மண்ணெண்ணெய்விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டு ள்ளது. இதையடுத்து ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 20 ரூபாயை தொட்டுள்ளது.

கடந்த மாதம் 1-ந் தேதி 14.2 கிலோ எடை கொண்ட மானிய சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 5 ரூபாய் 57 காசுகள் உயர்த்தின. தற்போது மீண்டும் 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தித்க கொண்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.