குடியரசு தலைவர் பதவியில் இருந்து நாளையுடன் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்று வருகிறது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிவைடைந்தது.

இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சி வேட்பாளராக மீராக்குமாரும் போட்டியிட்டனர்.

இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று குடியரசு தலைவர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் பதவியில் இருந்து நாளையுடன் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்று வருகிறது.

இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சுமித்ரா மகாஜன், ஹமீது அன்சாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.