சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருந்து வரும் புதுச்சேரிக்கு வருடம் தோறும் லட்ச கணக்கான, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இப்படி அவர்கள் வந்து செல்லும் இடங்களில் ஒன்று, பாரதி பூங்கா. 

இந்த பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், மற்றும் கடற்கரை அருகே உள்ளதால். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். அதே போல் விடுமுறை நாட்களில் இங்கு தங்களுடைய குழந்தைகளுடன் வரும் தம்பதிகளும் பலர். 

இந்நிலையில் இந்த பூங்காவில், அவ்வப்போது இளைஞர்கள் சிலர் கேங்காக அமர்ந்து  மது அருந்தி அசிங்கம் செய்வது பார்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும் இதற்கு நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.