pollution lession in school....
ஐ.சி.எஸ்.இ. பாடப்பிரிவு புத்தகத்தில் மசூதியில் ‘பாங்கு சொல்வது’ காற்றுமாசு ஏற்படுத்தும் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்ததையடுத்து கடும் சரச்சை ஏற்பட்டு, சமூக வலைதளங்ளில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவியல் பாடப்புத்தகத்தை ‘செலினா பப்ளிஷர்ஸ்’ என்ற நிறுவனம்வௌியிட்டு இருந்தது. இதையடுத்து, அந்த பாடப் புத்தகத்தின் பதிப்பாளர் அந்த செயலுக்கு மன்னிப்பு கோரி, விரைவில் நீக்குவதாக உறுதியளித்தார்.
காற்றுமாசு
ஐ.சி.எஸ்.இ. பாடப்பரிவில் 6-ம் வகுப்புக்கான அறிவியல் பாடத்தில் காற்றுமாசு ஏற்படுத்தும் இடங்கள், பொருட்கள் குறித்து பாடமும், படங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அதில் காற்று மாசு ஏற்படும் பொருட்களாக விமானம், கார், லாரி,பஸ், ரெயில் போன்ற வாகனங்களுடன், மசூதியில் வாங்கு சொல்வதும் இடம் பெற்று இருந்தது.
கடும் கண்டனம்
இந்த பாடம் குறித்த பதிவு, படங்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக்,டுவிட்டரில் வௌியாகி ்அதிகமாக பகிரப்பட்டது. இந்த பாடத்தை பார்த்தஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வாபஸ் பெற வலியுறுத்தல்
மேலும், காற்றுமாசு ஏற்படுத்தும் இடமாக மசூதியும், வாங்கு சொல்வதும் குறிப்பிடப்பட்டு இருப்பது நீக்கப்பட வேண்டும் என்று ஆன்-லைன் மூலமே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகமே பொறுப்பு
இது குறித்து ஐ.சி.எஸ்.இ. பாடப்பிரிவின் தலைமை நிர்வாகி கெர்ரி ஆரதூனிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் கூறுகையில், “ குறிப்பிட்ட பள்ளிகளில் கண்டனத்துக்குரிய வகையில் குறிப்புகள் இடம் பெற்று இருந்தால், அதற்கு அந்த பள்ளி நிர்வாகமே பொறுப்பு, அந்த பாடப்பிரிவுகளை நீக்கி, எதிர்காலத்தில் நடக்காதவாறு உறுதியளிக்க வேண்டும். ஆனால், ஐ.சி.எஸ்.இ. இதுபோன்று பிரசுரிக்கவில்லை’’ என்றார்.
மன்னிப்பு
இதையடுத்து, இந்த புத்தகத்தை அச்சிட்ட செலினா பப்லிஷசர்ஸ் பதிப்பாளர்ஹேமந்த் குப்தாவிடம் கேட்டபோது, “ இந்த செயலுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். அடுத்து வரக்கூடிய பதிப்புகளில் நிச்சயம் அந்த படத்ைதநீக்கிவிடுவோம். யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்’’ என்றார்.
இதற்கு முன்...
இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம், இந்தி திரைப்பட பாடகர் சோனு நிகம் இதுபோன்று சர்ச்சையில் சிக்கினார். “அதிகாலையில் மசூதிகளில் வாங்கு சொல்லும் சத்தமாக ஒலிபெருக்கிகளால் தான் நான் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறேன்’’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
மேலும், சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் அழகான பெண்களின் உடலமைப்பு என்பது, 36-24-36 என்று அளவுகளில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு பின் அது பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
