டீன் பருவத்தில் வரும் ஆழ்ந்த காதல் விவகாரங்களுக்கெல்லாம் போக்ஸோ சட்டத்தை பயன்படுத்த முடியாது எனக் கூறிய அலகாதாப் உயர் நீதிமன்றம் கைதானவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
டீன் பருவத்தில் வரும் ஆழ்ந்த காதல் விவகாரங்களுக்கெல்லாம் போக்ஸோ சட்டத்தை பயன்படுத்த முடியாது எனக் கூறிய அலகாதாப் உயர் நீதிமன்றம் கைதானவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
கடந்த 2019ம் ஆண்டு உ.பியைச் சேர்ந்த அடுல் மிஸ்ரா என்பவரும், 14 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இதில் அடுல் மிஸ்ரா உயர்ந்த சாதியையும், சிறுமி தலித் பிரிவையும் சேர்ந்தனர்.
இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் ஒரு கோயிலில் திருமணம் செய்து தனியாக வாழ்ந்தனர். சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரின் தந்தை 2019ம் ஆண்டு நவம்பரில் போலீஸில் புகார் அளித்திருந்தார், போலீஸாரும் தேடிவந்ததில் அந்த சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிஸ்ரா மீது ஐபிசி போக்ஸோ சட்டம் பிரிவு 376, மற்றும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இந்நிலையில் மிஸ்ராவும், அந்த சிறுமியும் இணைந்து வாழ்ந்ததில் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டனர். ஒருநாள் குழந்தையுடன் அந்த சிறுமி இருப்பதாக சிலர் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அந்தசிறுமியின் தந்தைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸார் உதவியுடன்சென்று தனது மகளையும், குழந்தையும் அழைத்துவந்தார். இந்த சம்பவத்தின்போது அவரின் மகள் மைனராக இருந்ததால், பிரயாக்ராஜ்ஜில் உள்ள காப்பகத்தில் மகளும், குழந்தையும் சேர்க்கப்பட்டனர். மிஸ்ரா போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுல்மிஸ்ரா தனக்கு ஜாமீன் வழக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் முறையிடவே போக்ஸோ சட்டத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மிஸ்ரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராகுல் சதுர்வேதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
போக்ஸோ சட்டத்தின் டீன் பருவத்தினர், இளம்வயதினர் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், போக்ஸோ சட்டத்தின் புரிதல் தன்மை இல்லாமல், அதன் பாதிப்புகளை உணராமல், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது நீதமன்றத்தின் மனசாட்சிக்கு வேதனையாக இருக்கிறது.
கடந்த ஜனவரி 25ம் தேதி நீதிமன்றம் போக்ஸோ சட்டம் குறித்த விளக்கத்தில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல், சீண்டல், ஆபாசப்படங்கள் ஆகியவற்றிலிருந்து காக்கவே போக்ஸோ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 15 குழந்தைகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது.

ஆனால், டீன் பருவ பிள்ளைகள் காதலில் விழுந்தார்கள் என்பதற்காக, பெற்றோர் அளிக்கும் புகார்கள் அதிகமாக போக்ஸோ சட்டத்தில் பதிவு செய்யப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள், பதின்வயதினரை போக்ஸோ சட்ட வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று போக்ஸோ சட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆனால், மைனர் பெண்ணுடைய சம்மதம் என்பது சட்டத்தின் பார்வையில் செல்லாது அதை ஏற்க முடியாது. ஆனால், தற்போதைய சூழலில், அந்த சிறுமிக்கு ஒரு குழந்தை, மனுதாரர் மூலம் பிறந்துள்ளது. அந்த சிறுமியும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தனது பெற்றோருடன் செல்லவிரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த5 மாதங்களாக காப்பகத்தில் அந்த சிறுமி மனிதர்கள் வாழமுடியாத சூழலில் இருந்திருக்கிறார்., அந்தக் காப்பகம் எந்த அளவு மோசமாக இருக்கிறது என்றும் அந்த சிறுமியின் வேதனைகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது என்பதும் அவரின் பேச்சில் தெரிகிறது.
ஒட்டுமொத்த சூழலையும் மதிப்பிட்டதில், பதின்வயதில் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும் விதத்தைதான் குறை சொல்ல வேண்டும், இலக்கு வைக்க வேண்டும். வாழ்க்கையின் உயர்ந்த மதிப்புகளை,குடும்ப பாரம்பரியத்தையும் கற்றுக்கொடுப்பதில் பெற்றோர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கையையும், தங்கள் முன்னுரிமைக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். குழந்தைகளின் இந்த நிலைக்கு முழுமையாக குறை சொல்ல வேண்டியது பெற்றோரின் இயலாமை, பொறுப்பின்மையாகும்.

ஒரு எப்ஐஆர் மட்டும் போட்டு பெற்றோர் தங்கள் தோல்வியை மறைத்துவிட முடியாது. டீன் வயதினர் குடும்பவாழ்க்கைக்குள் நுழைய முடிவெடுத்து நுழைந்துவிட்டதால் குழந்தையும் பெற்றதால், போக்ஸோ சட்டம் அவர்கள் வழியில் வராது. அந்த சிறுமி பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படவில்லை, பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை. மனுதாரரால் பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளாகவில்லை. ஆதலால் இது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது. அந்த மனுதாரருக்கு ஜாமீன் வழங்குகிறேன்
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது
