பாக்கெட் மணியை சேமித்து நன்கொடை வழங்கிய சிறுமி நந்தினி! பிரதமர் மோடி பாராட்டு!
நந்தினி என்ற 7 வயது சிறுமி தனது தனக்குக் கிடைத்த பாக்கெட் மணியை சேமித்து வைத்து மத்திய அரசின் காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
நந்தினி என்ற 7 வயது சிறுமி தனது தனக்குக் கிடைத்த பாக்கெட் மணியை சேமித்து வைத்து மத்திய அரசின் காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில் சிறுமி நந்தினி பற்றிக் கூறி இருக்கிறார். 'சிறிய கைகள், பெரிய தாக்கம்!' என்று தலைப்பில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிவிட்டிருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில், "இமாச்சலப் பிரதேசத்தின் உனாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி நளினி சிங், நிக்ஷய் மித்ரா இயக்கம் வாயிலாக பிரதமரின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்துக்கு ஆதரவாக தனது பாக்கெட் மணி சேமிப்பை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள்!" என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், "உங்கள் சிறிய முயற்சி ஒருவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்" எனச் சொல்லி இருக்கும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா #TBMuktBharat என்ற ஹேஷ்டேகைக் குறிப்பிட்டு காசநோய் ஒழிப்புப் போராட்டத்தை வலுப்படுத்தவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி ரீட்வீட் செய்து, சிறுமி நந்தினியின் யோசனைக்கும் உதவிக்கு பாராட்டு தெரிவிக்கும் முகமாக நல்ல செய்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் இந்த பாராட்டைத் தொடர்ந்து ஏழு வயது சிறுமி நந்தினிக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், காசநோய் ஒழிப்புக்காக இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் சளி, இருமல், பசியின்மை, எடை குறைதல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.