இன்று வெளி வருவதாக இருந்த ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், விவேக் ஓபராய் நடித்துள்ள ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. மோடியின் புகழ்பாடும் இந்தப் படம் தேர்தல் நேரத்தில் வெளியிட தடை கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடியின் சுயசரிதைப் படத்தை வெளியிட்டால், அது பாஜகவுக்கு சாதகமாகும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

மேலும் மும்பை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் படத்தை தேர்தல் நேரத்தில் ரிலீஸ் செய்ய தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் நேற்று இரவு பட ரிலீஸ் குறித்து ட்வீட் செய்திருந்தார். அதில், “பிஎம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியிடப்படவில்லை. விரைவில் அடுத்த அறிவிப்பு வெளியிடுவோம்” என்று தன் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார்.