பிரதமர் மோடியின் மன் கி பாத்.. நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? - ஆய்வு செய்த SBI - IIM பெங்களூரு!

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் மன் கி பாத்தின் 105 எபிசோடுகள், நாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை குறித்து SBI மற்றும் ஐஐஎம்-பெங்களூருவின் ஆய்வுப் பணி சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. தற்போது அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளது.

pm narendra modi mann ki baat completed 105 episodes sbi and iim bengaluru research ans

மன் கி பாத் என்ற சக்திவாய்ந்த மற்றும் திறன்வாய்ந்த தகவல் தொடர்பு ஊடகத்தால் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் நீடித்த தாக்கத்தை இந்த கூட்டு ஆராய்ச்சி மதிப்பீடு செய்துள்ளது. இயற்கை மொழி செயலாக்கத்தை (Natural Language Processing) பயன்படுத்தி மன் கி பாத்தின் கொள்கை உட்பொருளை பகுப்பாய்வு செய்வதிலும் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.

மன் கி பாத்தின் கொள்கைகள் என்னென்ன?

Beti Bachao Beti Padhao

"Beti Bachao Beti Padhao" திட்டம், அதாவது மகளை காப்பாற்றுங்கள், மகளுக்கு கல்வி கொடுங்கள் என்று பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு எதிராக இந்திய அரசால் துவங்கப்பட்ட ஒரு சட்டம். கடந்த 2015ம் இந்த திட்டம் துவங்கப்பட்ட நிலையில், மன் கி பாத் மூலம் இந்த திட்டம் இன்னும் அதிகமான நபர்களை சென்றடைந்தது என்று ஆய்வு கூறுகின்றது.

Beti Bachao Beti Padhao

செல்வமகள் 

"Beti Bachao Beti Padhao" திட்டத்தின் இன்னொரு முன்னெடுப்பு தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), (செல்வமகள் திட்டம்) இதுவும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் பொருட்டு இந்திய அரசால் துவங்கப்பட்ட சிறிய சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டமும் மன் கி பாத்தின் நிகழ்வு மூலம் பெரிய அளவில் பிரபல்யம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

யோகாசனம் 

காலங்காலமாக நம் இந்திய மண்ணில் இருந்து வரும் ஒரு விஷயம் தான் யோகா, ஆனால் கடந்த 2015ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த மன் கி பாத் நிகழ்வில் யோகா குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டது. யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பல விஷயங்கள் மன் கி பாத் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் விளைவாக உலக அளவில், குறிப்பாக யோகா குறித்த கூகுள் தேடல் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது.

Yoga
  
காதி 

நமது சுதந்திரப் போராட்டத்தின் போது காதி பெரும் புகழ் பெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மாறிவரும் காலப்போக்கில் அது அதன் பிரபலத்தை இழந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால் மன் கி பாத் மூலம், காதி அபரிமிதமான பிரபலத்தை கடந்த சில ஆண்டுகளில் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல. அதே நேரத்தில் விற்பனையும் அதிகரித்தது, காதியின் சமூக ஊடக கவரேஜும் அதிகரித்துள்ளது.

Khadi

முத்ரா லோன் 

முத்ரா லோன் விண்ணப்பத் தேடல் நவம்பர் 15 முதல், அதாவது மன் கி பாத்க்குப் பிறகு கூகுள் தேடல்களில் பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது. 

சிறுதானியங்கள்
 
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிறுதானியங்கள் குறித்து கூகிளில் மிகக் குறைவான தேடல்களே இருந்தது. மேலும் மன் கி பாத் மூலம் அவை கூடுதல் ஈர்ப்பைப் பெற்றன, முந்தைய சராசரி 0.026லிருந்து 55.77 ஆக அது அதிகரித்தது.

Millet

கலங்கரை விளக்கங்கள் மூலம் சுற்றுலா 

நாட்டிலுள்ள பாரம்பரிய கலங்கரை விளக்கங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் 65 கலங்கரை விளக்கங்கள் உள்ளன, அவற்றை சுற்றுலா தளங்களாக உருவாக்க அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios