Asianet News TamilAsianet News Tamil

ஐடி துறையில் இந்தியா அடுத்தகட்ட வளர்ச்சி.. மத்திய அரசின் தரமான நடவடிக்கைகள்

இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

pm narendra modi led indian government taking action to boost it sector in country
Author
Delhi, First Published Nov 5, 2020, 11:55 PM IST

இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஐ.டி துறையில் இந்தியாவை மேம்படுத்த அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை கொண்டு வந்துள்ளது. அதை பிரதமர் மோடியே தெரிவித்தார். இந்தியாவை தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளதுடன், ”ஈஸி ஆஃப் டூயிங்” பிசினஸை மேலும் மேம்படுத்த இந்த நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது என்றார்.

பிபிஓ துறைக்கு அதிக உத்வேகம் அளிக்க இந்த புதிய கொள்கையின் கீழ் OSPகளுக்கான பதிவு நீக்கப்பட்டது. இது வணிக செயல்முறை அவுட்சோர்சிங் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். இது அதிக நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களை வென்றெடுக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு உதவும்..

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது என்றும், ஐடி துறையை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும், அரசாங்கம் அதில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios