பிரதமர் மோடி போல ராகுல் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் போபாலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்திலும் மோடி போல பேசினார் ராகுல். அதற்கு முன்னர் மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திலும் இதேபோல ராகுல் பேசினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, ராகுலை போல  நரேந்திர மோடி மிமிக்ரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் மோடி பேசுவதைப் போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிமிக்ரி செய்துகாட்டி காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உத்தரப்பிரதேசத்தில் தன் சகோதரி பிரியங்காவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசினார். அப்போது ஒரு கூட்டத்தில் மோடியை போல ராகுல் பேசியதைக் கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். 

ரபேல் விவகாரம், மோடி ஆட்சியின் பொருளாதார தோல்விகள் பற்றி இயல்பாகப் பேசிகொண்டிருந்த ராகுல் காந்தி திடீரென்று, தனது உடலை குறுக்கிக் கொண்டு, ‘மோடிஜி, முன்னர் இப்படித்தான் பேசுவார்' என்று அவரைப் போல குரலை மாற்றிப் பேசினார். தொடர்ந்து மார்பகங்களை நிமிர்த்தியபடி, ‘இப்போது இப்படித்தான் மோடிஜி பேசுகிறார்' என்று கேலி செய்தார். உடல் மொழியுடன் கூடிய ராகுலின் இந்த மிமிக்ரியைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் சந்தோஷத்தில் கோஷமிட்டனர். 