Mission LiFE: ஏசி வெப்பநிலை17 டிகிரியில் வேண்டுமா; அப்படின்னா என்னவாகும்; பிரதமர் மோடி எச்சரிக்கை!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமைக்கான சிலை அருகே 'மிஷன் லைஃப்' (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

PM Modi UN chief Guterres launch Mission LiFE for climate in Kevadia Gujarat

கெவடியாவில் நடந்த 'மிஷன் லைஃப்' துவக்க விழாவில், பிரதமர் மோடி பேசுகையில், "பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினை அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. நமது பனிப்பாறைகள் உருகுகின்றன. ஆறுகள் வறண்டு வருகின்றன. பருவநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு மிஷன் லைஃப் உதவும். 

"காலநிலை மாற்றம் என்பது வெறும் கொள்கை தொடர்பான பிரச்சினை என்றும்  அரசுகளோ அல்லது சர்வதேச நிறுவனங்களோ அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது, ​​மக்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உணர்ந்து இருக்கிறார்கள். கொஞ்சம் மாறி வரும் வாழ்க்கை முறை சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கும். சிலர் ஏசி வெப்பநிலையை 17 டிகிரிக்கு குறைக்க இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இது சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்குகிறது. உடற்பயிற்சி கூடங்களுக்குச்  செல்லும் போது சைக்கிளைப் பயன்படுத்துங்கள். நமது வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கும். 

மறுபயன்பாடு, குறைத்தல் மற்றும் மறுசுழற்சி ஆகியவை இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நாம் மீண்டும் இந்த நடைமுறைகளை புழக்கத்தில் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

வெளுத்து வாங்கிய கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு.. மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..!

பிரதமரை அடுத்து பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், '' ஜி 20 நாடுகள் இணைந்து இயற்கைக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நிலையான வாழ்க்கையை நோக்கி நம்மை வழி நடத்தி செல்ல வேண்டும். அந்த மாபெரும் சக்தி அவர்களுக்கு உள்ளது.

"ஜி 20 நாடுகள் உலகளாவிய கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தில் 80 சதவீதம் பங்கு வகிக்கின்றன. ஆனால் இது உலகளாவிய ஜிடிபி-யில் 80 சதவீதம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஜி 20 இணைந்து மாசு இல்லாத சூழலை ஏற்படுத்த முடியும். வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இந்தியா முக்கியப் பங்கை வகிக்க முடியும். 

"பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்து வகையிலும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் COP27 முக்கிய பங்கு வகிக்கிறது. பருவநிலை தாக்கம் மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால்  வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கை வகிக்க முடியும். 

நமது கோளையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகவும், தீர்வு காண்பதற்காகவும் தனிநபரும், சமூகங்களும் இணைந்து முன் வர வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி உதவ வேண்டும். இந்தியா போன்ற நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும்'' என்றார். 

வரும் நவம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை எகிப்தில் ஐநா சார்பில் பருவநிலை மாற்ற மாநாடு நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று நெவடாவில் மிஷன் லைஃப் துவக்கி வைக்கப்பட்டது.

பட்டாசுகளை வாங்கினாலோ, வெடித்தாலோ 6 மாதம் சிறை... டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios