சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் குன்மிங்கில் இருந்து 133 பயணிகளுடன் சென்ற சீன இஸ்டர்ன் பேசன்ஞர் ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் குவாங்சோவுக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது குவாங்சி என்ற மலைப் பகுதியில் இந்த விமானம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த செய்தியை சீனாவுக்குச் சொந்தமான சிசிடிவி செய்தி நிறுவனம் வெளியிட்டது. இந்த விமான விபத்து காரணமாக அங்குள்ள காட்டுப்பகுதியில் மோசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் போயிங் 737 வகை விமானம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் இந்த விமானம் விபத்தில் சிக்கி உள்ளது.

விபத்து ஏற்பட்ட உடன் காட்டுத் தீயை அணைக்கவும் விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக குவாங்சி மாகாண அவசர மேலாண்மை பணியகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைவாகச் சென்றுள்ள மீட்புக் குழுவினர், முதற்கட்டமாகத் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு சீனாவில் மோசமான ஜெட் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அப்போது கடந்த 2010ஆம் ஆண்டு ஹெனான் ஏர்லைன்ஸின் எம்ப்ரேயர் இ-190 பிராந்திய ஜெட் விமானம் யிச்சுன் விமான நிலையத்தின் அருகே ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் பயணித்த 96 பேரில் 44 பேர் உயிரிழந்தனர். அதை அடுத்து இந்த விபத்து என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீன விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 132 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானத செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் தனது பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
