நாடு முழுவதும் மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிடமாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். 

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல்வர்கள் கையெழுத்திட்டனர். 

இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு முழுவதும் விவசாயிகள் சொல்ல முடியா துயரம் அடைந்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் 15 தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளார். அவர்களின் அனில் அம்பானியும் அடங்குவர். 

நாங்கள் வாக்குறுதி அளித்தது போல 2 மாநிலங்களில் விவசாயக்கடனை 6 மணி நேரத்திற்குள் தள்ளுபடி செய்துள்ளோம். விரைவில் ராஜஸ்தான் அரசும் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று ராகுல் தெரிவித்துள்ளார். இதேபோல மத்திய அரசும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிடப்போதில்லை. மேலும் இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அதற்காக அழுத்தம் தரப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.