Asianet News TamilAsianet News Tamil

Russia Ukraine Crisis: உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள்... ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

PM Modi speaks to Russian President Vladimir Putin
Author
India, First Published Feb 24, 2022, 11:28 PM IST

உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போர் நின்ற பிறகே விமானங்களை இயக்குவது பற்றி முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அதன் அண்டை நாடுகளுக்கு அழைத்து செல்ல அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

PM Modi speaks to Russian President Vladimir Putin

மேலும், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது. உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என இந்தியாவுக்கான் உக்ரைன் தூதர் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில், உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் பிரச்சனையில் இந்தியா நடுநிலை வகிக்கும் எனவும், அமைதியை ஏற்படுத்தும் தீர்வை எதிர்நோக்கி இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார். இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் பிரதமர் மோடி இன்றிரவு பேசவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

 

அதன்படி, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேசினார். அப்போது, ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகள் குறித்தும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறி இந்தியா திரும்புவதற்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் ரஷ்ய அதிபர் புதினிடம் தெரிவித்தார். அப்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios