Asianet News TamilAsianet News Tamil

மிக விரைவில் நேதாஜிக்கு கிரானைட் சிலை... உறுதி அளித்தார் பிரதமர் மோடி!!

மிக விரைவில் கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 

pm modi promised that granite statue for netaji soon
Author
Delhi, First Published Jan 23, 2022, 9:30 PM IST

மிக விரைவில் கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளையொட்டி முப்பரிமாண லேசர் சிலையை பிரதமர் மோடி டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் திறந்து வைத்தார். நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் புதிய சிலை அமைக்கப்படும் வரை லேசர் முறையில் முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண மின்னொளி வடிவிலான சிலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றும் நாம் நிற்கும் இந்த இடமும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும் மிக விரைவில் இங்கு கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

pm modi promised that granite statue for netaji soon

நேதாஜி பிறந்தநாளை வீரத்திருநாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என்றும் பேரிடரை எதிர்கொள்ள நவீன கருவிகள் நம்மிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பேரிடர் படையை வலுப்படுத்தியுள்ளோம் என்றும் நேதாஜியின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்றும் விண்வெளி தொழில்நுட்பம் முதல் திட்ட மேலாண்மை வரை சிறப்பான நடைமுறைகள் ஏற்கப்பட்டன என்றும் கூறிய பிரதமர் மோடி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அணைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் விடுதலை பெறவேண்டும் என்ற நம்பிக்கையை புகுத்தியவர் நேதாஜி என்றும் இந்திய தாய்நாட்டை சுதந்திரத்திற்காக போர்க்களமாக மாற்றியவர் நேதாஜி என்றும் புகழாரம் சூட்டினார்.

pm modi promised that granite statue for netaji soon

இந்தியர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிய பிரதமர் மோடி, சுதந்திர போராட்டத்தில் நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் என்றும் கடுமையான சோதனைகளை சந்தித்தபோதும், பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிய மறுத்தவர் என்றும் தெரிவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு முன்னாள் தலைவணங்க மறுத்தார் என்றும் நேதாஜியின் சிலை ஜனநாயக விழும்பியங்களையும், எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவிக்கும் என்றும் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, விரைவில் ஹோலோகிராம் சிலைக்கு பதிலாக பிரமாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios