Asianet News TamilAsianet News Tamil

PM Modi : இந்திய சிறுவர்களை பாராட்டிய பிரதமர் மோடி... எதற்காக தெரியுமா?

15-18க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

pm modi praised 15 to 18 year old childs whom vaccinaed first dose
Author
India, First Published Jan 19, 2022, 3:14 PM IST

15-18க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வெறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு புறம் ஓமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை அடுத்து நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

pm modi praised 15 to 18 year old childs whom vaccinaed first dose

இதனிடையே நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி கடந்த 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், 15 முதல் 18க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு இது மிகப்பெரிய நாள். 15-18 வயதுக்குட்பட்ட இளையவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர். நல்லது, என் இளம் நண்பர்களே.

 

தடுப்பூசி போடுவதற்கான உங்கள் உற்சாகம், இந்திய மக்களை ஊக்குவிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  15-18க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இளைய மற்றும் இளமைத்தன்மையுள்ள இந்தியா வழிகாட்டுகிறது. இது ஊக்கமளிக்கும் செய்தியாகும். இந்த வேகத்தை தொடர்ந்து நாம் பராமரிப்போம். தடுப்பூசி செலுத்துவதும், கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிப்பதும் முக்கியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios