Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளுவர் மூலம் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன மெசேஜ் என்ன தெரியுமா?

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரை வாழ்த்தி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

PM Modi pays tributes to Thiruvalluvar
Author
First Published Jan 16, 2023, 3:13 PM IST

ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது ஏதாவது ஒரு திருக்குறளை மேற்கொள் காட்டிப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர் இன்று திருவள்ளுவர் தினத்துக்கான வாழ்த்துச் செய்தியை ட்விட்டரில் தமிழ் மொழியிலேயே பதிவிட்டுள்ளார்.

அதில், “திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட  அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Narendra Modi: யாரும் சாதிக்க முடியாததை சாதித்தவர் மோடி: பாகிஸ்தான் எழுத்தாளர் புகழாரம்

“மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை  படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்.” என்றும் பிரதமர் மோடி ந்தன் வாழ்த்துச் செய்தியில் சொல்லியிருக்கிறார்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் விருதுகளை பத்து தமிழ் அறிஞர்களுக்கு வழங்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios