சண்டிகரில் இன்று பிரதமர் மோடி மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பஞ்சாப் மாநில கட்சியான சிரோமனி அகாலி தளத்தின் மூத்த தலைவராகவும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். 95 வயதான இவருக்கு கடந்த ஒரு வார காலமாக மூச்சு விடுவதில் சிரமம் நிலவி வந்தது.

இதன் காரணமாக அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

சண்டிகரில் இன்று பிரதமர் மோடி சண்டிகர் சென்று மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கு சிறிது நேரம் அமர்ந்து இருந்தார்.

இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!