குஜராத் மோர்பி பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

குஜராத் மோர்பி பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குஜராத்தில் உள்ள மோர்பியில் பாலம் விபத்துக்குள்ளானதை அடுத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த துயரமான நேரத்தில் அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: பிரிட்டிஷ் ராணுவம் கொன்ற மான்கார் தாம் பழங்குடியினர் - நினைவுச்சின்னமாக அறிவித்தார் பிரதமர் மோடி !!

அதை தொடர்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கினர். இந்த விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் அடையாளம் காணும் விரிவான விசாரணையை நடத்துவது காலத்தின் தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை

Scroll to load tweet…

இந்த கூட்டத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல், உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, குஜராத் மாநில அமைச்சர் ஸ்ரீ பிரிஜேஷ் மெர்ஜா, குஜராத் மாநில தலைமைச் செயலர், மாநில டிஜிபி, உள்ளூர் கலெக்டர், எஸ்பி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மோர்பியை அடைந்ததும், பாலம் விபத்துக்குள்ளான இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

Scroll to load tweet…