Asianet News TamilAsianet News Tamil

டிச.30 அன்று தேசிய கங்கா கவுன்சில் கூட்டம்... ஐந்து மாநில முதல்வர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!!

கொல்கத்தாவில் டிச.30 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி ஐந்து மாநில முதல்வர்கள் சந்திக்க உள்ளார். 

pm modi meets five state chief ministers at national ganga council meeting on dec 30
Author
First Published Dec 29, 2022, 12:19 AM IST

கொல்கத்தாவில் டிச.30 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி ஐந்து மாநில முதல்வர்கள் சந்திக்க உள்ளார். கொல்கத்தாவில் வரும் 30 ஆம் தேதி தேசிய கங்கா கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநில முதல்வர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: 2023ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட போகிறீர்களா? இந்த 7 இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க !

இந்த கூட்டத்தில் தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (என்.எம்.சி.ஜி) குறித்த விரிவான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய கூட்டத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடிநீர் அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், கப்பல் துறை அமைச்சகம் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: திமுக அரசு நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!!

அதுமட்டுமின்றி கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் ஐந்த மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி, ஹேமந்த்  சோரன், யோகி ஆதித்யநாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கான்பூரில் தேசிய கங்கா கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. அதன்பிற்கு தற்போது தான் நடக்கிறது. இது 2வது முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios