Asianet News TamilAsianet News Tamil

ஓவர் சவுண்டு ஓவைசி..! ஓவர் ஹேப்பி மோடி: இன்னாபா நடக்குது நாட்டுல..!

போராட்டம் துவங்கிய போது கல்லூரி மாணவி அமுல்யா என்பவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று தொடர்ந்து மூன்று முறை கோஷம் போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தார் அசதுதீன் ஓவைசி. அதன் பிறகு மைக்கை பிடுங்கிய  ஓவைசி ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய பெண்ணின் செயலை கடுமையாக கண்டிக்கிறேன்.

PM Modi is very much happy about Owaisi
Author
Tamil Nadu, First Published Feb 23, 2020, 3:22 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

* இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் அண்டை நாடுகம்,  சில மேற்கத்திய நாடுகளும் கருத்து கூறுவது தேவையற்றது. நமது வளர்ச்சிக்கான முடிவுகளை ஆலோசித்து முடிவெடுக்கும் அனைத்து தகுதியும் நமக்கே உள்ளது. இதில் பிற நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. -வெங்கய்ய நாயுடு (துணை குடியரசு தலைவர்)

* சேலம் சிட்டியில் தொடர் மூன்று நாட்களில் மூன்று முதியவர்களை மர்ம நபர்  கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். இந்த குற்றத்தில் ஆண்டிசாமி எனும் நபர் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு ‘சைக்கோ’ என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. - பத்திரிக்கை செய்தி

* குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கு 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவுள்ளார். அதை முன்னிட்டு அவர் செல்லும் வழியில் உள்ள குடிசைகளை மறைக்க, பெரிய அளவில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. - கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

* தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் அப்பா, அம்மா, பாட்டி பெயரெல்லாம் கேட்கின்றனர். ஒன்றும் கொடுக்கவில்லை என்றால், ‘நீ என்ன பண்டிகை கொண்டாடுகிறாய்?’ என்று கேட்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுகின்றனர். ஆனால் ரம்ஜான், பக்ரீத்  என்றால் விட மாட்டார்கள். -துரைமுருகன் (எதிர்க்கட்சி துணைதலைவர்)

* தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தை சேர்ந்த 500 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியில் தொழில் துவங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றுக்கு நிலம் வழங்க, நாங்கள் தயாராக உள்ளோம். -நாராயணசாமி (புதுவை முதல்வர்)

* மதுரை கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. செய்தியாளர் மாரநாடுவை, மதுரை வடக்கு புறநகர் மாவட்ட செயலாளரான மூர்த்தி எம்.எல்.ஏ. தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாரநாடு வைகோவிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனே மூர்த்தியை ‘நீங்கள் என்ன ஸ்டாலினைவிட பெரியவரா? எங்கள் மாவட்ட செயலாளரை அநாகரிகமாக பேசியிருக்கீங்க?’ என்று கேள்விகளால் வெளுத்திருக்கிறார் வைகோ. -பத்திரிக்கை செய்தி

* உலகம் முழுவதும் பத்து கோடி பேரால் தமிழ் மொழி பேசப்படுகிறது. ஆனால் வெறும் பதினான்காயிரம் பேரால் மட்டுமே பேசப்படும் செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு தமிழை விட அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது பெரும் கண்டனத்துக்கு உரியது. -கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

* உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘நம் நாட்டிற்கு ராம ராஜ்ஜியம்தான் தேவை. சோசலிசம் தேவையில்லை’ என்கிறார். இதில் இருந்து அவர் ஏழைகள் பக்கம் இல்லை. பணக்காரர்கள் பக்க இருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோர், சமநீதி பெறுவதற்கு எதிரானவர் அவர். -அகிலேஷ் யாதவ் (உ.பி. முன்னாள் முதல்வர்)

* காங்கிரஸில் விஜய் சேருவது பற்றி பேசப்பட்டதே தவிர, அழைக்கப்படவில்லை. காங்கிரஸுக்கு விஜய் வந்தால் மனதார ஏற்றுக் கொள்வோம். நடிகர் ரஜினியிடம் ‘64 லட்சம் ரூபாய் அபராதம் கட்டினால், மேல்முறையீடு செய்ய மாட்டோம்’ என கூறிய வருமான வரித்துறையினர், விஜய்க்கு ஒரு நாள் கூட அவகாசம் தரவில்லை. -    கே.எஸ். அழகிரி (தமிழக காங் தலைவர்)

* போராட்டம் துவங்கிய போது கல்லூரி மாணவி அமுல்யா என்பவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று தொடர்ந்து மூன்று முறை கோஷம் போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தார் அசதுதீன் ஓவைசி. அதன் பிறகு மைக்கை பிடுங்கிய  ஓவைசி ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய பெண்ணின் செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது போன்று நடக்கும் என தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்துஸ்தானுக்கு ஜே! பாரத் மாதாகி ஜே!’ என்று கோஷமெழுப்பினார். (பாரத் மாதா கி ஜே! என்று சொல்லமாட்டேன் என்று சில சில நாட்களுக்கு முன்பு வரை கூட பேசிய ஓவைசி இப்போது அவரது வாயாலேயே இப்படி சொல்லியிருப்பது பிரதமர் மோடி வரை சந்தோஷப்பட வைத்துள்ளதாம்)-பத்திரிக்கை செய்தி. 

Follow Us:
Download App:
  • android
  • ios