Russia Ukraine Crisis :ரஷ்ய - உக்ரைன் போர்..அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று இரவு பேசவுள்ளதாக தகவல்..
Russia Ukraine Crisis:உக்ரைன் விவகாரம் தொடர்பாக இன்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் இணைந்துள்ள நேட்டா அமைப்பதில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர்தாக்குதலை தொடங்கியுள்ளது.உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து,ரஷ்ய இராணுவ படைகள் உக்ரைனில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளது.கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வழிகிறது.
இந்நிலையில் ரஷ்யா போர் தொடுத்துள்ள விஷயத்தில் இந்தியா தலையிட வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலகா கோரிக்கை விடுத்தார். மேலும் பிரதமர் மோடி மிகவும் சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய உலக தலைவர்களில் ஒருவர் எனவும் ரஷியாவுடன் உங்களுக்கு சிறப்பான மற்றும் வியூக ரீதியான உறவும் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் மோடி புதினுடன் பேசினால் அவர் நிச்சயம் பதலளிப்பார் என்றும் உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு வலுவான குரல் இருப்பதால் அவர் கூறுவதை புதின் சிந்திப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவிற்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும் என்றும் இந்தியாவின் தீவிர ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில்,பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.பாதுகாப்பு,உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனார்.
இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக இன்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக உக்ரைனில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்று வழிகள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை வெளியேற்ற மாற்று நடவடிக்கை செய்யப்பட்டவுடன் உடனடியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இந்தியர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எப்போது வைத்திருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.