Asianet News TamilAsianet News Tamil

5 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடிசைத்து துவக்கி வைத்தார்!

மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர், ராஞ்சி- பாட்னா,  தார்வாட்-பெங்களூரு, கோவா-மும்பை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்!!
 

PM Modi flags off five Vande Bharat Express trains from Bhopal
Author
First Published Jun 27, 2023, 11:15 AM IST

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அவை, ராணி கமலாபதி-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மற்றும் ஹதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.

ராணி கமலாபதி-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மகாகௌஷல் பகுதியை (ஜபல்பூர்) மத்தியப் பிரதேசத்தின் மத்திய மண்டலத்துடன் (போபால்) இணைக்கும். மேலும், பெரகாட், பச்மாரி, சத்புரா போன்ற சுற்றுலாத் தலங்களும் மேம்படுத்தப்பட்ட இந்த இணைப்பால் பயனடையும். இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது சுமார் முப்பது நிமிடங்கள் வேகத்தில் இந்த வந்தேபாரத் ரயில் பயணிக்கும்.


கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மால்வா பிராந்தியம் (இந்தூர்) மற்றும் புந்தேல்கண்ட் பிராந்தியம் (கஜுராஹோ) மத்தியப் பகுதியிலிருந்து (போபால்) இணைப்பை மேம்படுத்தும். இது மஹாகாலேஷ்வர், மண்டு, மகேஷ்வர், கஜுராஹோ, பன்னா போன்ற முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு இடையே பயணிக்கிறது. இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலை விட இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்கள் வேகமாக இந்த வந்தேபாரத் ரயில் பயணிக்கும்.

 

PM Modi flags off five Vande Bharat Express trains from Bhopal

மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கோவாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் ரயில் நிலையம் இடையே இயங்கும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஒரு மணிநேர பயண நேரத்தை குறைக்க உதவும்.

தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடகாவின் முக்கிய நகரங்களான - தார்வாட், ஹூப்பள்ளி மற்றும் தாவங்கேரே - மாநில தலைநகர் பெங்களூருவுடன் இணைக்கிறது. இது இப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் போன்றோருக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த ரயில் பாதையில் இருக்கும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது சுமார் முப்பது நிமிடங்கள் வேகத்தில் பயணிக்கிறது

ஹதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், ஜார்கண்ட் மற்றும் பீகாருக்கான முதல் வந்தே பாரத் ரயிலாகும். பாட்னா மற்றும் ராஞ்சி இடையே இணைப்பை மேம்படுத்தும் இந்த ரயில் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிட பயண நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios