ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில்  11 யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நக்சலா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்த்து.

இதில், அமர்நாத் யாத்ரீகர்கள் 11 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்து விபத்தில் யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாகவும், காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.