பிரதமர் மோடி தமைமையில் நிதி ஆயோக் கூட்டம்; மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மிஸ்ஸிங்!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக்கின் 8வது ஆட்சிமன்றக் கூட்டம் தலைநகரில் தொடங்கியது. 

PM Modi Chairs 8th Governing Council Meeting Of NITI Aayog; Mamata, KCR Not Attending

இந்தக் கூட்டத்தில் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்குடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் விவாதங்கள் நடத்தப்படுகிறது. நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பானது அனைத்து மாநில முதல்வர்களையும் உள்ளடக்கியதாகும். யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் ஆளுநர்கள்  மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நிதி ஆயோக் தலைவர் பிரதமர் மோடி இருக்கிறார்.

கூட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்த நிதி ஆயோக், ''எட்டாவது கவுன்சில் கூட்டத்தை நிதி ஆயோக் 'Viksit Bharat @ 2047: Role of Team India' on May 27, 2023." என்ற பெயரில் நடத்துகிறது என்று தெரிவித்து இருந்தது.

அந்த அறிக்கையில், ''உலகின் 5வது பெரிய பொருளாதாரமாகவும், அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும்  இருக்கும் இந்தியா, அடுத்த 25 ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியை எட்டக்கூடிய  பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. இதற்கு மத்திய அரசுடன் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்  ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லி அரசின் அதிகாரங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரவிந்த் ஜெக்ரிவால் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமருக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கடிதத்தில், ''நிதி ஆயோக்கின் நோக்கமே இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை உருவாக்குவது மற்றும் கூட்டாட்சியை ஊக்குவிப்பதாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தால் ஜனநாயகம் "தாக்கப்பட்டு'' வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios