பெங்களூருவில் பிரதமர் மோடி இன்று 26 கி. மீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்றத்துக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 13 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் களம் காணுகின்றன. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் இன்று முக்கியத் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் சுமார் 26 மணி நேர ரோடு ஷோ நடத்துகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஹூப்ளியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஸ் ஷெட்டரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இந்த தேர்தலில் சோனியா காந்தி மேற்கொள்ளும் முதல் பிரச்சாரம் இதுவாகும். இவருடன் மாலை ஆறு மணி கூட்டத்தில் ராகுல் காந்தியும் இணைந்து கொள்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு பொதுக்கூட்டங்கள் மற்றும் இரண்டு ரோடு ஷோக்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா மூன்று ரோடு ஷோக்களை நடத்துகிறார். முன்னதாக பெல்காவியில் நடைபெறும் பேரணிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…

தற்போது பிரதமர் மோடி பெங்கரூருவில் ரோடு ஷோவை துவக்கி நடத்தி வருகிறார். காலை 10 மணிக்கு ஜே.பி.நகர் 7வது கட்டத்திலிருந்து தொடங்கி 18 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மல்லேஸ்வரத்தில் உள்ள சாங்கே சாலையில் இந்த ரோடு ஷோ நிறைவடைகிறது.

Scroll to load tweet…

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்சிவாலா பாஜக தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை "கொலை செய்ய" சதித்திட்டம் தீட்டுவதாக சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். 

Scroll to load tweet…

செய்தியாளர்களிடம் சிதாபூரில் இருந்து பாஜக வேட்பாளரின் ஆடியோ கிளிப்பை வெளியிட்டு பேசுகையில், "மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது முழு குடும்பஉறுப்பினர்களையும் கொல்லுவோம் என்று பாஜகவினர் பேசி இருப்பது மிகவும் மலிவான அரசியல்'' என்று தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…