வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா 20000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வெறும் ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளவாசிகள் முகநூலில் வம்பிழுத்துள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணமாக அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

100 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை கேரளம் சந்தித்துள்ளது. 80 அணைகள் நிரம்பியதால் அவை திறக்கப்பட்டன. 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வரலாறு காணாத வகையில் பெய்த இந்த  மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 370  பேர் பலியாகிவிட்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

மொத்தம் 20 ஆயிரம் கோடிக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட பிரநாயி விஜயன்,  அவசர வெள்ள நிவாரண நிதியாக ரூ. 2000 கோடியை மத்திய அரசிடம் அவர் கேட்டுக் கோரிக்கை விடுத்தார்.  அதன்படி ரூ. 500 கோடி நிதியுதவியை மத்திய அரசு கேரளாவுக்கு அளிக்கும் என்று மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், கார்த்திகேய சிவசேனாபதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார் அதில், மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே, 

சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு ஒதுக்கிய ரூ 10,000 கோடியை, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கொடுத்து விடுங்கள்.

நாங்கள் ஒரு மணி நேரம் அதிகமாக பயணித்து சேலத்துக்கு  சென்று  கொள்கிறோம்.

 இப்படிக்கு,
தமிழக மக்கள்

- கார்த்திகேய சிவசேனாபதி
22/08/2018 இவ்வாறு கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.