வேலைக்கு செல்லும் பெண்களுக்காக்ன பிரசவ விடுமுறை 26 வாரங்களாக உயர்த்தப்பட்டு இடைக்கால மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்றத்தில் இன்று நிதித்துறை மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். மேலும் அவர் அறிவித்துள்ள திட்டங்களில் ’’வேலை தேடுபவர்கள் எல்லாம் வேலை கொடுப்போராக மாறியுள்ளனர். அகல ரயில்பாதைகளில் ஆளில்லா ரயில்வே கிராசிங் இல்லாத நிலையை எட்டியுள்ளோம். இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது .

செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு அளிக்கப்படும். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் கோடி கண்டறியப்பட்டுள்ளது. சினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12% நியமனம். ஒரு மாதத்திற்கு ரூ. 97,000 கோடி வரி வசூலாகிறது.

அத்தியாவசிய மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மிக மிக குறைந்த அளவு வரி. ஜி.எஸ்.டி வரி தாக்கல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வது மேலும் எளிதாக்கப்படும். ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரியில் சில மாற்றம். 34 கோடி வங்கி கணக்குகள் ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன; வரி வருவாய் உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் ரூ.6.38 லட்சம் கோடியில் இருந்து, ரூ.12 லட்சம் கோடியாக உயரந்துள்ளது. 99.54 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர். சூரிய மின் சக்தி கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்காக உயர்ந்துள்ளது’’ என அவர் அறிவித்துள்ளார்.