கேரளா மாநிலத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கேரளா மட்டுமன்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என தென்மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் சபரிமலைக்கு வருகை தருகிறார்கள். இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல,மகர விளக்கு பூஜை முக்கியம் வாய்ந்தது. மண்டல காலம் தொடங்கும் கார்த்திகை 1ம் தேதி அன்று மாலையணிந்து 41 நாட்கள் பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள்.

மண்டல பூஜை முடிந்த பிறகு டிசம்பர் 30ம் தேதியில் இருந்து மகர விளக்கு பூஜை தொடங்கும். தொடர்ந்து ஜனவரி 15ம் தேதி அன்று புகழ்பெற்ற மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். இந்த ஆண்டிற்கான மண்டல காலம் நிறைவு பெற்று தற்போது மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது. மகர விளக்கு பூஜையின் போது சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தள அரண்மனையில் இருந்து வழிநடையாக சபரிமலைக்கு இன்று எடுத்து செல்லப்படுகிறது. 15ம் தேதி மாலையில் திருவாபரணங்கள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் சுவாமி அய்யப்பன் காட்சி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Image may contain: one or more people, crowd and outdoor

மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டை சேர்ந்த பக்தர்கள் நேற்று எருமேலியில் பேட்டை துள்ளி ஆடினர். பேட்டை தர்மசாஸ்தா கோவிலில் பேட்டை துள்ளி ஆடி யானைகளுடன் ஊர்வலமாக வாவர் பள்ளிவாசலுக்கு வந்தனர். அங்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வாவர் பள்ளிவாசலை வலம் வந்து அருகில் இருக்கும் பெரிய சாஸ்தா கோவிலில் வழிபட்ட பின்னர் பேட்டை துள்ளல் நிகழ்வு நிறைவு பெற்றது. அதன்பின் பெருவழி பாதை வழியாக அவர்கள் சபரிமலை புறப்பட்டுச் சென்றனர்.

எருமேலியில் இந்த நிகழ்வு காலம் காலமாக நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் தவறாமல் எருமேலியில் பேட்டை துள்ளி ஆடி வாவர் பள்ளிவாசலில் வழிபட்ட பின்னரே தங்கள் யாத்திரையை தொடங்குகின்றனர். இந்து-முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு நடந்து வருகிறது.

எத்தனையோ பேரை காப்பாற்றியிருக்கேன்.. ஆனா உன்ன பறிகொடுத்துட்டனே..! உதவியாளர் மரணத்தால் உடைந்து போன அமைச்சர் விஜய பாஸ்கர்..!