சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 29 காசுகளும், டீசல் லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தி அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாதத்தின் முதல்தேதியிலும், 15-ந் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 29 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.68.41 காசுகளுக்கு விற்பனையாகும் நிலையில், இனி ரூ.69. 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். இதில் மாநில வரிகள் அடங்காது. கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதிபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.21 காசுகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.58.28 காசுகள் விற்பனையாகும் நிலையில் இனி ரூ. 59.25 காசுகளுக்கு விற்பனையாகும். கடந்த டிசம்பர் 16-ந்தேதி டீசல் விலை ரூ.1.79 காசுகள் உயர்த்தப்பட்டது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:55 AM IST