Petrol pumps to sell LED bulbs tube lights ceiling fans soon
மின் சிக்கனம் செய்யும் எல்.இ.டி.பல்பு, டியூப் லைட், மின்விசிறி ஆகியவை குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதன்படி எல்.இ.டி.பல்புகள் ரூ.65க்கும், டியூப்லைட் ரூ.230க்கும், மின்விசிறி ரூ.1,150க்கும் மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், மற்றும் பாரத் பெட்ரோலியம்ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் கீழ் இயங்கும் பெட்ரோலிய விற்பனை நிலையங்களில் மட்டுமே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
எரிசக்தி திறன் சேவை நிறுவனமும், எண்ணெய் நிறுவனங்களும் செய்து கொண்டபுரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று முதல் விற்பனை செய்யப்பட இருந்தது. ஆனால், மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் அணில் மாதவ்தவே திடீரென காலமானதால், இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விரைவில் புதிய தேதி அறிவிக்கப்பட்டு, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி, அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த பொருட்கள் பெட்ரோலிநிலையங்களில் விற்பனைக்கு வரும் என சுற்றுச்சூழல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எரிசக்தி திறன் சேவை நிறுவனம் மொத்தமாக கொள்முதல் செய்வதால், 9வாட்எல்.இ.டி. பல்புகள் ரூ.38-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எல்.இ.டி. டியூப் லைட்கள் சந்தையில் ரூ. 1700 முதல் 1800க்கு விற்கப்படும் நிலையில், இங்கு ரூ.600 முதல் 700 வரை விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
