Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல் விலை திடீர் உயர்வு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

petrol price-increase
Author
First Published Dec 1, 2016, 9:45 AM IST


பெட்ரோல் விலையேற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 13 காசு உயர்த்தியும், டீசல் விலையை 12 காசு குறைத்தும் இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி.) நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை மாற்றம், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த மாற்றத்துக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.65.58 எனவும், டீசல் விலை லிட்டர் ரூ.56.10 எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரமும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான மாற்றத்தை சந்தையில் பிரதிபலிக்க செய்வோம் என ஐஓசி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios