பெட்ரோல், டீஸல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது…இன்று இரவு அறிவிப்பு…
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீஸல் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இந்திய எண்ணைய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தி வருகின்றன.
தற்போது பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணைய் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 44 புள்ளி நான்கு 6 டாலராக இருந்தது.
ஆனால் நேற்று ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை திடீரென 53 புள்ள ஏழு 8 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஏற்ப டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பன்னாட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வை காரணமாக காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணைய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இன்று இரவு பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
இம்முறை பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்றும் அதேபோன்று டீசல் விலையும் அதே அளவு உயரும் என்றும் தெரிகிறது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிக்கும் போது பெட்ரோல்,டீஸல் விலையை உயர்த்தும் எண்ணைய் நிறுவனங்கள், கச்சா எண்ணைய் விலை குறையும் போது விலையை குறைப்பதில்லை என குமுறுகின்றனர் பொதுமக்கள்.
