கடந்த 2016-ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட போது, டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சலுகை கொண்டுவரப்பட்டது. அப்போது மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம்,இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள்தள்ளுபடி தர சம்மதித்தன.  இப்போது ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

அக்டோபர 1-ம் தேதிக்குப்பின், இனிமேல் கிரெட்டி கார்டு மூலம் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட்டால் எந்தவிதமான சலுகையும், தள்ளுபடியும் இனிமேல் வழங்கப்படாது.

இதுதொடர்பாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு பிரிவு தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ள செய்தியில் “ அக்டோபர் 1ம் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களில் கிரெட்டி கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போட்டால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 0.75 சதவீதம் தள்ளுபடி இனிமேல் வழங்கப்படாது” எனத் ெதரிவிக்கப்பட்டுள்ளது.