மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பலி 8 ஆக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் சுய ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் தற்போது இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பலி 8 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக மகாராஷ்டிராவில் இருவரும், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், பீஹார், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி இருந்தனர். மேலும் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ஜெய்ப்பூரில் கொரோனவால் உயிரிழந்தார். நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.