people can watch cinema serial in train

ரெயில் பயணத்தின் போது, புகழ்பெற்ற டி.வி. சீரியல்கள், ஹாலிவுட், பாலிவுட், மற்றும் மாநில மொழித் திரைப்படங்களைப் பார்க்கும் வசதியை விரைவில்ரெயில்வே துறை அறிமுகம் செய்ய இருக்கிறது.

குறிப்பிட்ட சொகுசு ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள், தங்களின் லேப்டாப்,ஸ்மார்ட்போன்கள், ஐ.பேட்கள், உள்ளிட்டவற்றில் இந்த திரைப்படங்களை கண்டு ரசிக்கலாம்.

இந்த வசதி ராஜ்தானி, சதாப்தி, ஹம்சபர் உள்ளிட்ட சொகுசு ரெயில்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக மற்ற ரெயில்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவைக்காகரெயில்வே துறை, பயணிகளிடம் குறிப்பிட்ட அளவு கட்டணத்தை வசூலிக்கும்.

இது குறித்து ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ குறிப்பிட்ட ரெயில்களில் பயணம் செய்யும், பயணிகள் தங்களின் செல்போன்,லேடாப், உள்ளிட்ட பொருட்களில் புகழ்பெற்ற ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள், டி.வி. சீரியல்கள், இசை ஆல்பங்கள், மாநில மொழி திரைப்படங்கள் போன்றவற்றை கேட்டு, பார்த்து மகிழ முடியும்.

விரைவில் இந்த திட்டம் குறிப்பட்ட சில ரெயில்களில் மட்டும் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் ரெயில்வேக்கும் வருவாய் அதிகரிக்கும். வௌிநாட்டுடி.வி. சீரியல்கள், நகைச்சுவை காட்சிகளுக்கு நம் நாட்டில் ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். பயணிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப பணம் செலுத்தி பார்க்க முடியும். இதற்காக ரெயிலை ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்க இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.