Asianet News TamilAsianet News Tamil

‘மூடிஸ்’ நிறுவனம் மீது மோடிக்கு திடீர் காதல் - ப.சிதம்பரம் பயங்கர ‘கிண்டல்’

p.chithambaram Tease to prime minister modi
p.chithambaram Tease to prime minister modi
Author
First Published Nov 18, 2017, 7:20 PM IST


இந்தியாவின் மதிப்பீட்டை உயர்த்திய ‘மூடிஸ்’ சர்வதேச கடன் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் மீது மோடி அரசுக்கு திடீர் காதல் வந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

உயர்வு

சர்வதேச கடன் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான மூடிஸ் ,14 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் சர்வதேச கடன் தரமதிப்பீட்டை உயர்த்தி நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதை நிறுவனத்தை சமீபத்தில் மத்திய அரசு கடுமையாக விமர்சனமும் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ப.சிதம்பரம் மும்பையில், நேற்று நடந்த டாடா இலக்கிய விழாவில் கலந்து கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அ ரசையும், மோடியையும் கிண்டல்ச செய்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது-

மோடி அரசு விமர்சனம்

கடந்த சில மாதங்களுக்கு முன் மூடிஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டை மோடி அரசு கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் மிக நீண்ட கடிதத்தை எழுதி, மூடிஸின் தரமதிப்பீடு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அவர்களின் கடன் தரமதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரியிருந்தார். மூடிஸ் நிறுவனத்தின் கணிப்புகள் தவறானது என்று கடந்த 2016ம் ஆண்டு அறிக்கையும் மோடி அரசாங்கம் வெளியிட்டு இருந்தது.

திடீர் காதல்

இந்நிலையில், இந்தியாவின் கடன் தரமதிப்பீட்டை 14 ஆண்டுகளுக்கு பின் மூடிஸ் நிறுவனம் நேற்றுமுன்தினம் உயர்த்தியவுடன் அது குறித்து பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் புகழ்கிறார்கள். பெருமிதம் கொள்கிறார்கள். மூடிஸ் நிறுவனம் மீது மோடிக்கு திடீர் காதல் வந்துவிட்டது.

3 முக்கிய காரணிகள்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடுவதில் மூன்று முக்கிய காரணிகள் இருக்கின்றன. தனியார் துறை முதலீடு, சிறுதொழில்களுக்கான கடன் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவைதான் ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கு அடையாளமாகும். ஆனால், மோடியின் அரசின் இந்த மூன்று விஷயங்களும் அபாயகட்டத்தில் இருக்கின்றன.

சரிவு

மோடின் ஆட்சியில் முதலீடு உருவாக்கம் என்பது உச்சத்தில் இருந்து, 7 முதல் 8 புள்ளிகள் குறைந்துவிட்டது. எதிர்காலத்தில் மீண்டும் மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

ேவலையின்மை

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக தனியார் முதலீடும் மிகக்குறைவாக இருக்கிறது. திவால்சட்டம் காரணமாக பல திட்டங்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் இருக்கின்றன. இதன் காரணமாக வேலைவாய்ப்பு குறைந்து வேலையின்மை நிலவுகிறது.

கடனுதவி இல்லை

கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் கடன் தரமதிப்பீடு மிகவும் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு 6 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும். ஆனால், நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி என்பது பாதகமாக இருக்கிறது. சிறு, நடுத்தர, குறுநிறுவனங்கள் கடன்உதவி கிடைக்காமல், திணறுகின்றன.

19.60 லட்சம் வேலையிழப்பு

நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்தோ, வேலையின்மை குறித்தோ அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 19.60 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோய் உள்ளன எனத் தெரிவிக்கிறது. 

நாட்டில் 90 சதவீத வேலைவாய்ப்பு என்பது சிறு,குறுந்தொழில்கள் மூலம்தான் உருவாகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த, அந்த துறைகளுக்கு உடனடியாக ஊக்கம் தேவை

இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios