ரூபாய் நோட்டு விவகாரத்தில் தகுந்த விளக்கம் தேவை அளிக்கவேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னரை விழி பிதுங்கவைக்கும் வகையில்  நாடாளுமன்ற பொதுக்குழு 10 கேள்விகளை கேட்டுள்ளது 

1. ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு ரிசர்வ் வங்கி மற்றும் அதன் உயர்மட்டக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உண்மையில் அரசு ரிசர்வ் வங்கி ஆலோசனைப்படிதான் செயல்பட்டதா? இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

2. ரூபாய் நோட்டு தடை முடிவு உண்மையில் ரிசர்வ் வங்கியின் முடிவாக இருந்தால், எப்போது இந்த முடிவை எடுத்தீர்கள்? இந்தியாவின் எந்த நலனை அடிப்படையாகக் கொண்டு இதை எடுத்தீர்கள்?

3. ஒரே நாள் இரவுக்குள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பதற்கு  நியாயமான காரணம் என்ன இருக்கிறது?

4. ரிசர்வ் வங்கியின் சொந்த கணக்கீட்டின் படி கள்ள நோட்டுகள் மதிப்பு ரூ.500 கோடியாகும். நாட்டில் புழக்கத்தில் 86 சதவீதம் ரூ.500, ரூ.10000 நோட்டுகள் இருந்தன. ஆனால், சீனாவில் 90 சதவீதமும், அமெரிக்காவில் 81 சதவீதமும் உயர்மதிப்பு பணம் புழக்கத்தில் இருக்கிறது. அவர்கள் கூட ரூபாய் மதிப்பிழத்தல் நடவடிக்கையை அவசரப்பட்டு செய்யாமல் இருக்கும் போது, இந்தியா உடனடியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன?

5. ரிசர்வ் வங்கியின் உறுப்பினர்களுக்கு அவசர கூட்டம் என்று எப்போது செய்தி அனுப்பப்பட்டது?. யாரெல்லாம் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்?. எத்தனை மணிநேரம் கூட்டம் நடந்தது?.

6. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டு தடை குறித்த அறிவிப்பு குறித்து முடிவு எடுத்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பும்போது, நிலைமை சீரடைய எத்தனை நாட்களாகும் என்று குறிப்பிட்டு இருந்தீர்களா?

7. மக்களுக்க ஏ.டி.எம்.களில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம், வங்கியில் இருந்து ரூ.24 ஆயிரம் என பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எந்த சட்டத்தின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி  மக்களுக்கு தங்கள் சொந்த பணத்தை எடுக்க கெடுபிடி விதித்தது?. நாட்டு மக்களுக்கு பணத்தை ரேஷன் அடிப்படையில் வழங்க யார் அதிகாரம் கொடுத்தது? அப்படி எந்த ஒரு சட்டமும் இல்லாத நிலையில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக உங்களை ஏன் பணியில் இருந்து நீக்கக்கூடாது?

8. கடந்த 2 மாதங்களாக ரிசர்வ் வங்கி ஏன் மாற்றி, மாற்றி அடிக்கடி உத்தரவுகளை பிறப்பித்தது?. மக்களின் விரலில் மை வைக்கக் கூறிய அந்த ரிசர்வ வங்கியின் அதிகாரியின் பெயர் என்ன?. திருமணத்துக்காக பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை யார் விதித்தது, முடிவு செய்தது?. இந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி வகுக்கவில்லை. ஆனால், அரசுதான் விதித்தது என்றால், நிதி அமைச்சகத்தின் ஒரு பிரிவு ரிசர்வ்வங்கியா?

9. செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? பழைய ரூபாய் நோட்டுள் எவ்வளவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன?. எவ்வளவு பணம் வங்கிக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி, அரசிடம் தெரிவித்தது?

10. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்  தகவல்கள் தர ரிசர்வ் வங்கி ஏன் மறுத்து வருகிறது?, முட்டாள்தனமான காரணங்கள் ஏதும் இருக்கிறதா? தகவள் அறியும் உரிமைச்சட்டத்தில் ஏன் தகவல்களை தரவில்லை?

இந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்  படேல் வரும் 20ந்தேதிக்குள்பதில் அளிக்க வேண்டும். அந்த பதில் நாடாளுமன்ற பொதுக்குழுவுக்கு மனநிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து உறுப்பினர்களிடம் ஆலோசித்து, பிரதமர் மோடிக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு எடுக்கும்.